செய்திகள் உலகம்
காங்கோவில் இபோலோ தொற்றினால் 91 பேர் மாண்டனர்: அமெரிக்க விமான நிலையங்களில் கடும் பரிசோதனை
வாஷிங்டன்:
அமெரிக்கா, இபோலா (Ebola) நோய்ப்பரவலைத் தடுக்கக் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
விசா அனுமதிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
காங்கோ குடியரசில் பணியாற்றிய அமெரிக்கர் ஒருவருக்கு இபோலா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க வெளியுறவு அமைச்சு, நோய்த்தடுப்பு நிலையத்துடனும் ராணுவத்துடனும் இணைந்து செயல்படுகிறது.
உடனடி உதவிக்காக 13 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கோ குடியரசில் இபோலா நோய்த்தொற்றால் 91 பேர் மாண்டதாக நம்பப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய சுமார் 350 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
அவர்களில் பெரும்பாலானோர் 20 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பெண்கள்.
தற்போது பரவும் இபோலா ரகம் மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது.
அதற்கு தடுப்பு மருந்தோ சிகிச்சையோ கிடையாது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 3:14 pm
அடுத்தடுத்து வெடிக்கும் எரிமலை: இந்தோனேசியாவில் பதற்றம்
June 5, 2026, 12:48 pm
கியூபா அதிபருக்கு அமெரிக்காவின் அதிரடி தடை: சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு
June 5, 2026, 11:27 am
தாகத்தின் கொடூரம்: சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பரிதாப பலி
June 5, 2026, 9:56 am
புறப்படுவதற்கு முன் பரபரப்பு:.லுஃப்தான்சா ட்ரீம்லைனர் திடீரென சாய்ந்து விபத்து
June 4, 2026, 2:39 pm
ஆசியான் நாடுகளுக்கான பிரம்மாண்டமான புதிய கடல்வழிப் பாதை: சீனாவின் வரலாற்றுச் சாதனை
June 3, 2026, 2:43 pm
ஐ.நா. சபையின் புதிய தலைவராகிறார் வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான்
June 3, 2026, 12:01 pm
ஜப்பானை உலுக்கிய ஜாங்மி புயல்: உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
June 3, 2026, 10:07 am
2026 உலகக்கோப்பை சர்ச்சை: பிரபல சுவரோவிய கலைஞர் ஃபிஃபா மீது வழக்கு
June 2, 2026, 5:22 pm
