செய்திகள் தமிழ் தொடர்புகள்
தேர்தல் முடியும் வரை காத்திருந்து பெட்ரோல், டீசல் விலை ஏற்றிய பாஜக அரசு விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை பாஜக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் முடியும் வரை பொறுத்திருந்த பாஜக அரசு, தேர்தல் முடிந்தவுடன் விலையைத் திடுமென உயர்த்தியுள்ளது.
பெட்ரோல்-டீசல் ஆகியற்றின் விலையை லிட்டருக்கு ரூ. 3.00 உயர்த்தியிருப்பதன் மூலம் உழைக்கும் ஏழை மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.
எரிபொருள் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலைவாசி வெகுவாக உயரும். இதனால் மிகவும் பாதிக்கப்பட போவது விளிம்புநிலையைச் சார்ந்த ஏழை-எளிய உழைக்கும் மக்களே ஆவர்.
எனவே, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான இந்த விலை உயர்வை உடனே திரும்ப பெறவேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
