செய்திகள் தமிழ் தொடர்புகள்
பன்னூலாசிரியர் ஜே. எம். சாலி காலமானார்
சிங்கப்பூர்:
குழந்தை இலக்கிய உலகில் பிரபலமாகி , பத்திரிக்கையாளராக, இதழியலாளராக, சிறுகதை எழுத்தாளராக, வானொலி நாடக ஆசிரியராக ,மொழி பெயர்ப்பாளராக, குறு நாவல், நெடுங்கதை, நாவல் என்று தன் வாழ் நாளின் கடைசி வரை எழுதிக் கொண்டிருந்த
சிங்கப்பூர் கலாச்சார விருது பெற்ற
திரு ஜலாலுதீன் முகம்மது சாலிஹ் எனும் ஜே. எம். சாலி இன்று தமிழகத்தில் காலமானார்.
நம்பிக்கை தொடங்கிய காலத்தில் இருந்து அவரது சிறுகதைகளை நாம் தொடர்ந்து வெளியிட்டு வந்தோம். நம்பிக்கையின் வளர்ச்சிக்கு அவ்வப்போது அவர் ஆலோசனைகளையும் வழஙகி வந்தார். மலேசியா வரும்போது நம்பிக்கை அலுவலகம் வராமல் செல்ல மாட்டார்.
ஆனந்த விகடன், இதயம், சாவி, கல்கி, குமுதம், குங்குமம், தினமணி என வெகுஜன பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார். தமக்கென ஒரு பெரும் வாசகர் வட்டத்தையும் அவர் கொண்டிருந்தார்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் அழகிய பொறுமையைத் தருவானாக. அவருக்கு உயர் சுவனத்தை வழங்க நம்பிக்கை சார்பில் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
சிங்கப்பூரில் அவரது இறுதித் தொழுகை நடைபெறும் என்று எழுத்தாளர் ஷா நவாஸ் தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
