செய்திகள் தமிழ் தொடர்புகள்
சட்டப்பேரவை பதவியேற்பு கூட்டம் தொடங்கியது: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் தனித்தனியாக வந்தனர்
சென்னை:
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில் முதல்வர் ஜோசப் விஜய் உட்பட பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் எம்எல்ஏவாக பதவியேற்க தொடங்கினர்.
தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றார். இதனையடுத்து தற்காலிக பேரவைத் தலைவராக சோழவந்தான் தொகுதி தவெக உறுப்பினர் எம்.வி.கருப்பையாவை நியமிப்பதற்கான கோப்பில், முதல்வர் ஜோசப் விஜய்யிடம், பேரவைச் செயலர் கி.சீனிவாசன் ஒப்புதல் பெற்றார்.
ஆளுநர் மாளிகையில், தற்காலிக பேரவைத் தலைவராக கருப்பையாவுக்கு ஆளுநர் அர்லேகர் நேற்று மாலை 4 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில், முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்பதாக தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை.
முதல்வர் விஜய் பதவியேற்பின்போது வந்தது போலவே இன்றும் கோட் சூட்டில் வருகை தந்தார். சரியாக 9.30 மணிக்கு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது.
சபாநாயகர் உரைக்குப் பிறகு முதல்வர் விஜய் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ள தொடங்கினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
