செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாட்டு அரசு விழாவில் வந்தேமாதரம் பாடல் கவனக்குறைவாக பாடப்பட்டதா? ஆளுநா் விருப்பமா? அதிகாரிகளால் போடப்பட்டதா ? இந்த விவகாரம் முதலமைச்சா் விஜய்யின் கவனத்துக்கு வந்ததா?: தொல்.திருமாவளவன் கேள்வி
சென்னை:
திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஏதாவது மனக்கசப்பு இருந்ததா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளாா்
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவளித்துள்ள நிலையில், தில்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் மற்றும் பிற அமைச்சா்களுக்கும் வாழ்த்துகள்.
மதவாத கட்சிகள் ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதற்காக தற்போது த வெக அரசு அமைக்க ஆதரவு அளித்துள்ளோம்.
முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தாக 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது .இந்த இலவச மின்சாரம் இரண்டு மாதங்களுக்கு என்பதை 5 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு சிங்கப்பெண் திட்டம் வரவேற்கதக்கது, பாராட்ட தக்கது.
தமிழ்நாட்டு அரசு விழாவில் முதலில் தமிழ்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்.ஆனால் நேற்று (10.5.2026) வந்தேமாதரம் பாடல் முதலில் ஒலிக்கப்பட்டது. வந்தேமாதரம் பாடல் கவனக்குறைவாக ஒலிக்கப்பட்டதா ? ஆளுநா் விருப்பப்படி ஒலிபரப்ப்பட்டதா ? அதிகாரிகளால் போடப்பட்டதா ? இந்த விவகாரம் முதலமைச்சா் விஜய்யின் கவனத்துக்கு வந்ததா ? என விளக்கமளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் வளா்ச்சியில் அக்கறை செலுத்தி இந்த அரசு முனைப்போடு செயல்படும் என்று நம்புவதை வாழ்த்துகிறேன்.
கடன் குறித்த அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம். தமிழ்நாட்டுக்கு, கடன் இருக்கிறது என்பது உண்மை .ஆனால் அது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தான் இருக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
