நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மீபாவின் சொந்த விளையாட்டு அரங்கம்; இந்தியர்களின் அடையாளமாக விளங்கும்: டத்தோஸ்ரீ சரவணன்

சுங்கைபூலோ:

மீபாவின் சொந்த விளையாட்டு அரங்கம் இந்தியர்களின் அடையாளமாக விளங்கும்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

இந்தியர்களுக்காக மீபா பல போட்டிகளை நடத்தி வருகிறது.

அதில் குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

முன்பு ஒவ்வொரு வீடமைப்பு பகுதியிலும் திடல்கள் இருந்தன. ஆனால் இப்போது ஏராளமான திடல்கள் இல்லை. ஏன் பள்ளிகளில் கூட திடல்கள் இல்லை.

இருப்பினும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறையில் பின் தங்கி விடாமல் இருக்க மீபா மேற்கொண்டு வரும் முயற்சிகள் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மீபா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு  பல போட்டிகளை நடத்தி வருகிறது. மீபாவின் பணி தொடர வேண்டும்.

குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளில் மீபா சொந்த விளையாட்டு அரங்கை கொண்டிருக்க வேண்டும்.
இந்த விளையாட்டு அரங்கம் இந்தியர்களின் அடையாளமாக விளங்க வேண்டும். இதுவே எனது நீண்டகால இலக்கு.

கூட்டரசுப் பிரதேச தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியை இன்று சுங்கை பூலோ மெல்வூட் கிளப் திடலில் நடைபெறுகிறது.

இப் போட்டியை அதிகாரப்பூர்வமாக 
தொடக்கி வைத்து உரையாற்றிய போது டத்தோஸ்ரீ சரவணன் இதனைத் தெரிவித்தார்.

மீபாவின் தலைவர் அன்பானந்தன், துணைத் தலைவர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்றைய கால்பந்து போட்டியில் ஆண், பெண் என மொத்தம் 19 அணிகள் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset