நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாஆலமில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யுத்தம்; போராட்ட குணத்துடன் மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் செய்வதே எங்களின் நோக்கம்: தர்மராஜ்

ஷாஆலம்:

போராட்ட குணத்துடன் மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் செய்வதே ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யுத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஷாஆலம் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் இதனை கூறினார்.

ஷாஆலம் ஸ்ரீ முருகன் நிலையத்தின் மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை இலக்காகக் கொண்ட கல்வி யுத்தம் திட்டம் இன்று அதிகாரப்பூர்வத் தொடங்கியது.

ஷாஆலம் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய நிகழ்வு கல்வியில் சிறந்த விளங்கிய UP 1 High Achievers மாணவர்களைக் கௌரவிப்பதோடு தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, உத்திகள் நிறைந்த Chakar Vyuha போட்டியில் சிறந்த 10 இடங்களை பிடித்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

நவீன கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மின்னணு சாதனங்களுக்கு அடிமையாதல் (Gadget addiction) குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் டிஜிட்டல் சமநிலையைப் பேணுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இறுதியாக நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு பயிலரங்கம், வருங்காலத் தொழில்நுட்பங்களை மாணவர்கள் நேரடியாகக் கையாண்டு பழக ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இவ்வாறாக, இன்றைய நாள் பாரம்பரியச் சிறப்பையும் இலக்கவியல் யுகத்திற்குத் தேவையான திறன்களையும் ஒருசேர வழங்கியது என்று தர்மராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset