செய்திகள் மலேசியா
சரவா மாநில டிஏபி தனது தேர்தல் பாதையை தானே வகுத்துக்கொள்ளும்; மத்திய தலைமை அதன் முடிவுகளில் தலையிடாது: அந்தோனி லோக்
பெட்டாலிங் ஜெயா:
வரவிருக்கும் சரவா மாநிலத் தேர்தலில் டிஏபி கட்சி தனது பணிகளைத் தொடரும். விரைவில் வேட்பாளர் பட்டியல், பிரச்சார வியூகம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் முழு சுயாட்சியை அக் கட்சியின் மத்திய தலைமை அதன் சரவாக் கிளைக்கு வழங்கியுள்ளது.
களமிறக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை உட்பட, சரவாக் கிளை எடுக்கும் முடிவுகளில் மத்திய தலைமை தலையிடாது என்று டிஏபி பொதுச்செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
"சரவா முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதாக இன்னும் அறிவிக்காததால், நாங்கள் மாநிலத் தேர்தல் அறிவிக்கப்படும் வரை காத்திருப்போம்."
"வேட்பாளர்கள், தேர்தல் வியூகம் குறித்து அதன் சொந்த முடிவுகளை எடுக்க டிஏபி சரவாக்கிற்கு முழு உரிமை வழங்கி உள்ளது," என்று அவர் நேற்று உத்துசானிடம் கூறினார்.
மேலும், மாநிலத்தின் அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில் சரவாக் தலைமைக்கு அதன் சொந்த திட்டங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 10, 2026, 11:23 am
அரசாங்கத் துறையில் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உயர வேண்டும்: சுரேன் கந்தா
May 9, 2026, 11:24 pm
2027இல் மலேசியாவிற்கு வருகை தருமாறு புட்டினை மாட்சிமை தங்கிய மாமன்னர் அழைத்துள்ளார்
May 9, 2026, 11:18 pm
