நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தோசாவில் ஒற்றுமை சித்திரை பண்பாட்டு விழா; சிலாங்கூரில் இந்தியர் பாரம்பரிய கலாச்சார மையம் அமைக்கப்பட வேண்டும்: குணராஜ் கோரிக்கை

செந்தோசா:

சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர் பாரம்பரிய கலாச்சார மையம் அமைக்கப்பட வேண்டும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

செந்தோசாவில் ஒற்றுமை சித்திரை பண்பாட்டு விழா இன்று காலை முதல் மாலை வரை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பல்வேறு அரசு சாரா இயக்கங்களின் தலைவர்கள், ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து இவ்விழா நடைபெற்றது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மக்களிடையே ஒற்றுமையும் இந்திய பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இவ்விழா நடைபெற்றது.

குறிப்பாக நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் இவ்விழா நடத்தப்பட்டது.

பாரம்பரிய நடனம், இசை நிகழ்ச்சிகள், இந்திய பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், கண்காட்சிகள், சமூக குடும்ப நடவடிக்கைகள், பாரம்பரிய உணவுக் கடைகள், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி உட்பட பல நிகழ்வுகளை உட்படுத்தி  இவ்விழா நடைபெற்றது.

பண்பாட்டின் மூலம் நாம் அனைவரையும் ஒரே சமூகமாக இணைக்க முடியும்.

இதுவே எங்களின் நோக்கம் என்று குணராஜ் கூறினார்.

இவ்விழாவின் உச்சக்கட்டமாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர் பாரம்பரிய கலாச்சார மையம் அமைக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் நமது கலை, கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

இதற்கு பதிலளித்த மந்திரி புசார் அனைத்து இனங்களையும் பிரதிநிதிக்கும் வகையில் அம்மையம் அமைக்கப்படும் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset