நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத் துறையில் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உயர வேண்டும்: சுரேன் கந்தா

ஷாஆலம்:

அரசாங்கத் துறையில் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உயர வேண்டும்.

இதுவே ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் அடுத்த கோரிக்கை என்று அதன் இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யுத்தம் இன்று ஷாஆலம் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் நடைபெறுகிறது.

போக்குவரத்து துறை அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார்.

கிட்டத்தட்ட மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட 800க்கும் மேற்ப்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முக்கிய அங்கமாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் அரசு பணியாளர்கள் பிரிவு தொடங்கப்பட்டது.

கடந்த காலங்களில் அதிகமான இந்தியர்கள் அரசாங்கத்தில் பணியாற்றி வந்தனர்.

ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 3 முதல் 4 சதவீதமாகவே உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இந்த எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். இதுவே எங்களின் இலக்கு.

இதன் அடிப்படையில் தான் இப்பிரிவு இன்று அறிமுகம் செய்யப்பட்டது என்று சுரேன் கந்தா கூறினார்.

அரசாங்கத் துறையில் 10% என்றால் நான் இன ரீதியில் பேசுகிறேன். இதில் எந்த சாத்தியமும் இல்லை.

இந்திய சமுதாயமே குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது. ஆனால் 10 சதவீதம் கேட்கிறார் என்று பல குற்றச்சாட்டுகளும் எழும்.

உண்மையில் சீனர்கள் அதிகம் அரசாங்க துறையில் வேலை செய்வதில் விருப்பம் காட்டுவதில்லை.

ஆக அந்த வாய்ப்பையும் இந்திய சமுதாயத்திற்காக கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் ஆகும்.

இந்த கோரிக்கை எனக்காகவும் அல்லது ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்காகவோ கேட்கவில்லை.

இந்திய சமுதாயத்திற்காக நான் இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன் என சுரேன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset