நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2027இல் மலேசியாவிற்கு வருகை தருமாறு புட்டினை மாட்சிமை தங்கிய மாமன்னர் அழைத்துள்ளார்

மாஸ்கோ:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை 2027ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மாஸ்கோவில் அளித்த சிறப்பான வரவேற்புக்கு அதிபர்  புடினுக்கு நன்றி தெரிவித்த மாமன்னர்,

இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 60ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அடுத்த ஆண்டு மலேசியாவிற்கு வருகை தருமாறும் அவரை அழைப்பு விடுத்தார்.

மேலும் ரஷ்யாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகள் நன்றாக வளர்ந்து வருகின்றன என்று அதிபர் புடின் கூறியுள்ளார்.

நமது நாடுகளுக்கு இடையேயான உறவுகள் நன்றாக வளர்ந்து வருகின்றன.

அடுத்த ஆண்டு நாம் தூதரக உறவுகளின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவோம், என்று மாமன்னருடனான சந்திப்பின்போது புடின் கூறினார்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபை, ஆசியான் உள்ளிட்ட சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் தீவிரமாக ஒத்துழைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset