நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ ரமணனின் கோரிக்கைக்கு இணங்க மித்ராவிற்கு கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

பெட்டாலிங்ஜெயா:

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனின் கோரிக்கைக்கு இணங்க மித்ராவிற்கு கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

மித்ரா ஒதுக்கீடு இந்த ஆண்டு கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட்டாக  அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான மொத்த ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான தற்போதைய 100 மில்லியன்  ரிங்கிட் ஒதுக்கீட்டைக் கொண்டு இந்திய சமூகத்திற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் மித்ராவின் சமீபத்திய செயல்பாடுகள் பாராட்டுக்குரியது.

இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களின் கருத்துக்களை உள்ளடக்க முடியும் என்பதால், மித்ரா ஒரு சிறப்புத் திட்டமாகும்.

இருப்பினும், இத்திட்டம் உண்மையிலேயே தேவைப்படும் குழுக்களைச் சென்றடையும் வகையில் நாம் அதை மேம்படுத்த வேண்டும்.

ஆக இந்த ஆண்டு முதல், அதன் ஒதுக்கீட்டை 50 மில்லியன் ரிங்கிட் அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய இளங்கலை மாணவர்களுடனான சந்திப்புக் கூட்டத்தின்போது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்காக மித்ரா திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset