செய்திகள் தமிழ் தொடர்புகள்
முதல்வராக விஜய் இன்று பதவியேற்கிறார்: 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு
சென்னை:
விசிக, ஐயூஎம்எல் ஆதரவால் தவெகவின் பலம் 120 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், முதல்வராக விஜய் பதவியேற்கிறார்.
அவருடன் 9 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொள்வர்.
தமிழகத்தில் கூட்டணி அரசாங்கம் அமையவிருக்கிறது.
மற்ற அரசியல் கட்சிகள் தந்த ஆதரவில் திரு விஜய்க்குத் தற்போது 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அரசாங்கம் அமைக்க அவருக்கு 118 இடங்கள் தேவைப்பட்டன.
இந்நிலையில், மாலை 6.15 மணிக்கு விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, விஜய் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ஏற்கெனவே அங்கு வந்து காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1.45 மணி நேரம் நடந்தது.
அப்போது, 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் வழங்கினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக எம்எல்ஏ வன்னியரசு, மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார், ஐயூஎம்எல் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டு அரசியலில் 1967க்குப் பிறகு முதன்முறையாக இரண்டு திராவிடக் கழகங்கள் அல்லாத ஆட்சி அமைகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
