செய்திகள் தமிழ் தொடர்புகள்
பெண்கள் முன்னேற்றம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாக சென்னை "மிஷன் சக்திசாட்" திட்டத்தின் உலகளாவிய கூட்டாண்மையில் ராயல் கிங்ஸ் குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை:
பெண்கள் முன்னேற்றம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாக டாக்டர் ஶ்ரீமதி கேசன் தலைமையில் செயல்பட்டு வரும் "மிஷன் சக்திசாட்" திட்டத்தின் உலகளாவிய கூட்டாண்மையில் ராயல் கிங்ஸ் குழுமம் இணைந்துள்ளது.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் ஶ்ரீமதி கேசன் உடன் சென்னை நகரில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலின் பின்னர் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
உலகம் முழுவதும் 108-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த மிஷன் சக்திசாட் திட்டம், 12000-க்கும் அதிகமான மாணவர்களுக்கு விண்வெளி, ஷிஜிணிவி கல்வி சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக பெண் மாணவிகளை விண்வெளி, அறிவியல், தொழில்நுட்ப துறைகளில் முன்னேற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தக் கூட்டாண்மையை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தும் வகையில் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் 05.05.2026 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா நடைபெற்றது.
இதில் ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சிராஜுதீன் உட்பட கென்டோ கெய்சன் நிறுவனத்தின் தலைவரும் முதன்மை வழிகாட்டியுமான ஜே. முஹம்மத் பாரூக் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. டாக்டர் ஶ்ரீமதி கேசன் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பேசிய ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சிராஜுதீன் "சமூக பொறுப்புணர்வுடன் உலகளவில் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் பங்கெடுப்பது மிகுந்த பெறுமையாக உள்ளது. பெண்கள் முன்னேற்றம், எதிர்கால தலைமுறையினரின் அறிவியல் வளர்ச்சிக்காகச் செயல்படும் மிஷன் சக்திசாட் போன்ற திட்டங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை. இந்த உலகளாவிய பயணத்தில் ராயல் கிங்ஸ் குழுமம் பங்கெடுப்பதில் மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
மேலும் இந்த நிகழ்வில் ராயல் கிங்ஸ் குழுமத்தின் மூத்த ஆலோசகர் ஜலாலுதீன், தலைமை தகவல், தொழில்நுட்ப அதிகாரி ரியாஸுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டாண்மையின் மூலம் உலகளவில் மாணவர்கள், குறிப்பாக இளம் பெண்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
