செய்திகள் தமிழ் தொடர்புகள்
விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் ஏன் இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை?: ஆளுநர் மாளிகை விளக்கம்
மாமல்லபுரம்:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தவெக கட்சித் தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பாரா? ஏன் இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை? என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.
ஆளுநரை இன்று காலை தவெக தலைவர் விஜய் மீண்டும் சந்தித்து, அவரது கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து ஆளுநர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று ஆளுநர் மாளிகை ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தவெக தலைவர் விஜய்யை, ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைத்திருந்தார். அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது ஏன் அவசியம் என்பது குறித்து விஜய்க்கு ஆளுநர் விளக்கம் கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சட்டப்பேரவை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் 2-வது நாளாக தங்கவைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மேலும், வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 108 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட 80 எம்எல்ஏக்கள் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள போர் பாயிண்ட் என்ற தனியார் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்தனர். மேலும், தவெக ஆட்சி அமைக்கும் வரை இந்த விடுதியில் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
மேலும், தவெகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்கியுள்ளதால் விடுதியின் முகப்பு பகுதியில் 2-வது நாளாக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
