செய்திகள் மலேசியா
ஜொகூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படாது: ஓன் ஹபிஸ்
இஸ்கண்டா புத்ரி:
ஜொகூர் மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படும் என்ற வதந்திகளை ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபிஸ் காசி மறுத்துள்ளார்.
தற்போதைக்கு சட்டமன்ற தேர்தல் விவகாரத்தை முதலில் ஒதுக்கி வைக்க வேண்டும்.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஜொகூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படாது என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன்.
எனவே சட்டமன்ற உறுப்பினர்களே, நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். மக்கள் பிரதிநிதித்துவத் தேர்தல் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஜொகூர் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்யுங்கள். நாம் முதலில் தேர்தல் விவகாரத்தை ஒதுக்கி வைப்போம்.
நாம் செயல்படுத்த வேண்டிய பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் உள்ளன என்று இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் கட்டிடத்தில் நடைபெற்ற ஜோகூர் சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிறைவு விழாவில் அவர் கூறினார்.
அரசியல் பதற்றம் அதிகரித்து வருவதால், மக்கள் பிரதிநிதித்துவத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று பல யூகங்கள் நிலவுவதால், இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
