செய்திகள் மலேசியா
உணவகத்தில் ரகளை: மதுபோதையில் மேஜைகளை அடித்து நொறுக்கிய நைஜீரியருக்கு போலிஸ் வலைவீச்சு
கோலாலம்பூர்:
ஜாலான் கிள்ளான் லாமா பகுதியில் உள்ள உணவு விடுதி ஒன்றில், மதுபோதையில் மேஜைகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட நைஜீரிய நபர் ஒருவரைப் போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1.56 மணியளவில் நிகழ்ந்த இந்த அத்துமீறலால், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஹூ சான் ஹூக், அந்த நபர் உணவகத்திலிருந்த மேஜைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துச் சேதப்படுத்தியதாகத் தெரிவித்தார். தாக்குதலுக்கு அஞ்சிய உணவக உரிமையாளர் அவரைத் தடுக்க முற்படவில்லை என்றும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவகத்திலிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரின் அடையாளம் குறித்துப் போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுவரை அந்த நபர் யார் என்பது கண்டறியப்படாத நிலையில், அவரைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தற்போது இச்சம்பவம் குறித்துத் 'தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427'-ன் கீழ் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துமீறலில் ஈடுபட்ட அந்த வெளிநாட்டவரைப் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்தப் போவதாகப் போலிசார் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
