செய்திகள் மலேசியா
உயர் மதிப்புள்ள அரிய கனிமத் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ள மலேசியா ஆர்வமாக உள்ளது
புத்ராஜெயா:
நாட்டின் கனிம வளங்கள் அதிக கூடுதல் மதிப்பை உருவாக்கும் வகையில், இடைநிலைச் செயலாக்கத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி, அரிய தனிமத் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ள மலேசியா ஆர்வமாக உள்ளது.
இயற்கை சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறை துணையமைச்சர் சையத் இப்ராஹிம் சையத் நோ இதனை கூறினார்.
மலேசியாவிற்கான இந்திய தூதர் பி. என். ரெட்டி தலைமையிலான இந்தியக் குடியரசின் பிரதிநிதிகள் குழுவினருடன் சிறப்பு சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இந்த விருப்பம் வெளிப்படுத்தப்பட்டது.
அரிய கனிமத் தொழில்துறையில், குறிப்பாக இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் மூலம், இந்தியா விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டிருப்பதாக மலேசியா கருதுகிறது.
நாட்டின் அரிய கனிமங்களின் மேம்பாடு, உயர்வான, நீடித்த கூடுதல் மதிப்பை உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக மலேசியா அதன் செயல்பாட்டு மாதிரி, இடைநிலைச் செயலாக்கத் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்ய உத்தேசித்துள்ளது.
இந்த ஒத்துழைப்பில் தொழில்நுட்பப் பரிமாற்றம், உள்ளூர் நிபுணர்களின் திறன் மேம்பாடு ஆகிய அம்சங்கள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
