செய்திகள் தமிழ் தொடர்புகள்
தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரே நாளில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பது எங்கள் முதுகில் குத்தும் செயல்: திமுக
சென்னை:
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு, திமுகவின் முதுகில் குத்தும் செயல் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சரவணன் அண்ணாதுரை, “தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் குறுகிய பார்வை கொண்டது; தொலைநோக்குப் பார்வை அற்றது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்காக அவர்கள் வருந்த நேரிடும்.
2029 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட முடியும் என நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால், காங்கிரஸ் இப்போது எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக, அவர்கள் ஒரு நிலையற்ற கூட்டணி கட்சியாக மாறிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியை நம்ப முடியாது என்ற ஒரு கருத்து நாடு முழுவதும் பரவியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு நாள்தான் ஆகிறது. அதற்குள் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பது, முதுகில் குத்தும் செயல். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை என்றும் எனவே இந்த முடிவை எடுப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த முடிவை காங்கிரஸ் கட்சி முழு மனதுடன் எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு (இண்டியா) கூட்டணியில் உள்ள பிற கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக அவர்கள் செயல்படுகிறார்கள் என்றால், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களின் மனதில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? நாங்கள் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியை ஏமாற்றியதில்லை.
2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கணிசமான வெற்றியை அக்கட்சி பெற்றது. அப்போது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தரப்பினர், ராகுல் காந்தியை கேவலமாக விமர்சித்தனர். அந்த சூழலில், எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினார். அது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக அமைந்தது. அங்கிருந்துதான் 2024 தேர்தலில் ராகுல் காந்தியின் செல்வாக்கு உயர்ந்தது. இவை அனைத்தும் திமுகவின் கடின உழைப்பாளும் அது செலவிட்ட வளங்களாலுமே சாத்தியமானது. அதனால்தான், அவர்களால் இப்போது ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது.
தவெக பெரும்பான்மை இலக்கை எட்ட 11 இடங்கள் தேவைப்படுகின்றன. 47 இடங்களைக் கொண்டுள்ள அதிமுக நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தயராக இருக்கிறது. நீங்கள் விஜய்யாக இருந்தால் யாருடைய பேச்சைக் கேட்பீர்கள்? ஐந்து இடங்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியையா அல்லது 47 இடங்களைக் கொண்டுள்ள அதிமுகவையா? காங்கிரஸ் கட்சி மிகத் தவறான ஒரு முடிவை எடுத்துவிட்டதாக நான் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
