செய்திகள் தமிழ் தொடர்புகள்
தன் வேட்பாளர்கள் விலை போக வாய்ப்புள்ளதால் குதிரை பேரத்தை தடுக்க விஜய் முக்கிய ஆலோசனை
சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், குதிரை பேரத்தை தடுப்பதற்காக, தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக தனித்துப் போட்டியிட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர்,திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சமீபத்தில் வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தாலும், கள நிலவரம் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக தவெக நம்புகிறது.
இச் சூழலில், வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை ‘குதிரை பேரம்’ மூலம் தங்கள் பக்கம் இழுக்க திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டிருப்பதாக விஜய்க்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து, விஜய் கடந்த 2 நாட்களாக தனது கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து தவெக வட்டாரங்கள் கூறியதாவது: திமுக, அதிமுகவின் குதிரை பேரம் மூலம் இழுக்கும் நடவடிக்கையை முறியடிக்க சமீபத்தில், எல்லா தொகுதி வேட்பாளர்களுடனும் விஜய் அவசர ஆலோசனை நடத்தினார்.
“வெற்றிச் சான்றிதழ் பெற்றவுடன் நேராகப் பனையூர் தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டும்” என அவர் உத்தரவிட்டுள்ளார்.
வேட்பாளர்கள் பத்திரம்: இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் அச்சுறுத்தலோ, நெருக்கடியோ ஏற்பட்டால், வேட்பாளர்கள் தனக்கு நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என விஜய் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு பிரத்யேக எண் வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம், “நமது வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் பத்திரம். அவர்களைப் பாதுகாப்பாகப் பனையூருக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு” என விஜய் அழுத்தமாகக் கூறியுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்ட தொகுதியில் த வெ க வேட்பாளர் விலை போனதால் கோபமடைந்த விஜய் அங்கு நின்ற சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2026, 10:42 pm
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை
May 15, 2026, 3:11 pm
பன்னூலாசிரியர் ஜே. எம். சாலி காலமானார்
May 15, 2026, 10:16 am
தமிழக அமைச்சரவையில் சேர காங்கிரசுக்கு விஜய் அழைப்பு: கிரிஷ் சோடங்கர் தகவல்
May 13, 2026, 2:30 pm
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி
May 13, 2026, 12:09 pm
