செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதும் மக்கள்
சென்னை:
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இயந்திரப் படகுகள் கடலில் செல்லாததால், தினசரி பிடிக்கப்படும் மீன்களின் அளவு சுமார்40 டன்னுக்குக் குறைந்துள்ளது.
முன்பு அன்றாடம் 120 முதல் 150 டன் வரை மீன்கள் பிடிக்கப்பட்டன.
சிறிய படகுகளில் கொண்டுவரப்படும் புதிய மீன்களை வாங்க மக்கள் அதிகமாக காசிமேட்டை நாடுகின்றனர்.
வெப்பம் காரணமாகக் கோழி, ஆட்டிறைச்சியை விட மக்கள் மீனை விரும்பி வாங்குவதாகக் கூறப்படுகிறது.
சந்தைகளில் விற்கப்படும் மீன்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
கடல் வளங்களைப் பாதுகாக்க இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தில் 61 நாள் மீன்பிடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை இம்மாதம் 15ஆம் தேதி இந்திய அரசாங்கம் அறிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
