நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரொனால்டோ, மெஸ்ஸி சாதனை வரிசையில் ஹாரி கேன் 95 ஆண்டுகளில் முதல் இங்கிலாந்து வீரர்

முனிச்:

ஒரே சீஸனில் 50 கிளப் கோல்கள் அடித்த ஜாம்பவான்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி கேன் இணைந்துள்ளார். 

ரியல்மாட்ரிட் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் பாயர்ன் முனிச் அபார வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் பாயர்ன் முனிச் அணிக்காக கோல் அடித்தார்.

இதன் மூலம் 95 ஆண்டுகால வரலாற்றில், ஒரே சீஸனில் 50 கோல்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஹாரி கேன் படைத்தார்.

இதற்கு முன்பாக, 1930-31 சீஸனில் 
டாம் வாரிங் இந்த சாதனையை ஆஸ்டன் வில்லா அணிக்காக படைத்திருந்தார்.

50 கிளப் கோல்கள் அடித்த சாதனைப் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட சில ஜாம்பவான்களுடன் ஹாரி கேன் இணைந்துள்ளார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset