நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மீபாவின் ஒற்றுமை கால்பந்து விழா; 1,300 இளம் விளையாட்டாளர்கள் பங்கேற்பு: அன்பானந்தன்

சுங்கைபூலோ:

மீபாவின் ஒற்றுமை கால்பந்து விழாவில் கிட்டத்தட்ட 1,300 இளம் விளையாட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

மீபா தலைவர் அன்பானந்தன் இதனை கூறினார்.

இளம் விளையாட்டாளர்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதே மீபாவின் முதன்மை இலக்காகும்.

இதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்காக கால்பந்து போட்டிகளை மீபா நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மீபா ஒற்றுமை கால்பந்து திருவிழாவை நடத்துகிறது.

இன்று, நாளை என இரு தினங்களுக்கு சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் 1,300 இளம் விளையாட்டாளர்கள் பங்கேற்றுள்ளர்.

குறிப்பாக இந்தியர்களை தவிர்த்து சீன, மலாய்க்கார விளையாட்டாளர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

இது தான் இக்கால்பந்து போட்டியில் வெற்றியாகும்.

அதே வேளையில் இப்போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆதரவு தந்த மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு எனது நன்றி என்று அன்பானந்தன் கூறினார்.

முன்னதாக நாட்டில் அதிகமான இந்திய பெண்கள் கால்பந்து விளையாடுகிறார்கள் என்றால் அதற்கு மீபா தான் காரணம்.

இதை யாராலும் மறுக்க முடியாது என்று மீபா துணைத் தலைவர் ராஜன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset