செய்திகள் தமிழ் தொடர்புகள்
முதல்வர் வேட்பாளர் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எவ்வளவு தெரியுமா?
சென்னை:
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வியாழக்கிழமையில் ஒரே கட்டமாக காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணியளவில் முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டோரின் தொகுதிகளில் வாக்கு சதவிகிதம் எவ்வளவு?
முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலினின் தொகுதியில், இம்முறை 83.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் மற்றும் முதன்மை எதிர்க்கட்சியுமான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இம்முறை இந்தத் தொகுதியில் 89.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 71.88 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறைந்த அளவிலான வாக்குப்பதிவு பெற்ற தொகுதியாக காரைக்குடி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். விஜய் போட்டியிட்ட பெரம்பூரில் 86.72 சதவீதமும், திருச்சி கிழக்கில் 79.32 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
