செய்திகள் தமிழ் தொடர்புகள்
200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி நம்பிக்கை
திருச்சி:
“தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றிப் பெற்று, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்,” என்று திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சி திருவெறும்பூர் வேட்பாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி வரகனேரி த.செவந்திலிங்கம் முத்திரியர் உயர்நிலைப்பள்ளியில் வாக்களிக்க தனது மனைவி ஜனனியுடன் வந்தார்.
மக்களோடு மக்களாக வரிசையில் 25 நிமிடங்கள் காத்திருந்து வாக்களித்தார்.
அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளரிடம் கூறுகையில், “நான் திருவெறும்பூர் தொகுதியில் முதல் முறை போட்டியிட்டபோது என்னை திமுகவினர் அழைத்துச் சென்று வாக்குகள் சேகரிக்க வைத்தனர்.
அதற்கடுத்த தேர்தலில் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்றபோது, கடந்த முறை நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று என்னை வழிமறித்து உரிமையுடன் கேட்டனர். ஆனால் தற்போது 3-வது முறையாக நான் போட்டியிடுகிறேன். என்னை பொதுமக்கள் வரவேற்று, நாங்கள் கொடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறீர்கள். அதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

ஆனாலும் எங்களுக்கு சில தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றி கொடுங்கள் என்று உரிமையுடன் மனுக்களை கொடுக்கின்றனர். நான் வெற்றி பெற்ற பிறகு கண்டிப்பாக உங்களுக்கு நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று அவர்களிடம் வாக்குறுதி அளித்து இருக்கிறேன்.
திமுக அரசின் சாதனைகள், நான் தொகுதிக்கு செய்திருக்கின்ற மக்கள் நலத்திட்டங்கள் காரணமாக நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்.
தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பார்.” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
