செய்திகள் தமிழ் தொடர்புகள்
100% நம்பிக்கையோடு உள்ளேன்,”: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
எடப்பாடி:
“வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100% நம்பிக்கையோடு உள்ளேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி 2 நாட்கள் அவரது சொந்த மாவட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிலிருந்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை, அவரது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு வந்து வாக்களித்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 100% நம்பிக்கையோடு உள்ளேன் என்று தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
