நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நாளை வாக்குப்பதிவு: ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து விமானக் கட்டணமும் கடுமையாக உயர்ந்தன 

சென்னை:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஏப். 23ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி வெளியூர்களில் வேலை செய்வோர், வாக்களிக்கும் பொருட்டு சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.

அரசு சார்பில் இதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது. இதற்கான புகார் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விமானக் கட்டணமும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான விமானக் கட்டணம் ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 4,000 - ரூ. 5,000 வரை இருக்கும் நிலையில் தற்போது ரூ. 14,000 வரை உயர்ந்துள்ளது.

தூத்துக்குடிக்கு சாதாரண நாள்களில் ரூ. 5,000 கட்டணம் இருக்கும் நிலையில் ரூ. 17,000 - ரூ. 21,000 வரை உயர்ந்துள்ளது.

இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset