செய்திகள் தமிழ் தொடர்புகள்
திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: ஏஐஎம்ஐஎம் அசாதுதீன் ஓவைசி வேண்டுகோள்
ஹைதராபாத்:
திமுக கூட்டணிக்கு ஏஐஎம்ஐஎம் கட்சி ஆதரவு தருவதாக கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தேர்லுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சியினர், மத்திய அமைச்சர், முன்னாள் முதல்வர்கள், மூத்த தலைவர்கள் பலரும் மிகத் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்.23 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது.
இந்த நிலையில், ஹைதராபாத் எம்பியும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்துல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவருமான அசாதுதீன் ஓவைசி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய ஓவைசி, ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓவைசி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில், “அஸ்ஸலாமு அலைக்கும், மதிப்பிற்குரிய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு வணக்கம். உங்களின் பொன்னான வாக்குகளை நீங்கள் திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
