செய்திகள் தமிழ் தொடர்புகள்
‘சென்னை சூப்பர் 6’ - சென்னை பெருநகருக்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் ஸ்டாலின்
சென்னை:
‘சென்னை சூப்பர் 6’ எனும் சென்னைக்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 19), அண்ணா அறிவாலயத்தில், ‘சென்னை சூப்பர்-6’ எனும் வாக்குறுதிகளை வெளியிட, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்.
அதில் சென்னைக்கான மேம்படுத்தப்பட்ட பொதுவசதிகள், சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து, திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள், மனிதாபிமானம் - அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சினைக்கு தீர்வு, உலகளாவிய சிறப்பு மையம், உலகளாவிய திறமைத் தளம் ஆகிய தலைமைப்புகளிலான வாக்குறுதிகளை வெளியிட்டார்.
உலகளாவிய சிறப்பு மையம்:
Al, Animation, Visual Effects, Gaming, and Immersive Technologies க்கான சிறப்பு மையம்
ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு
20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள்
உலகளாவிய திறமைத் தளம் (Global Talent Gateway):
உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு
உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
ஆராய்ச்சி மையம்
அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள்’ ஆகிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
