நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்பாட்டுப் பன்முகத்தன்மை தேசிய ஒற்றுமைக்கு ஒரு வலுவான அடித்தளம்: பிரதமர்

கோலாலம்பூர்:

பண்பாட்டுப் பன்முகத்தன்மை தேசிய ஒற்றுமைக்கு  ஒரு வலுவான அடித்தளம் ஆகும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மலேசியாவில் உள்ள கலாச்சாரங்கள், பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல.

அது தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டிய தேசிய ஒற்றுமைக்கான ஒரு வலுவான அடித்தளமாகும்.

வைசாகி பண்டிகை போன்ற கொண்டாட்டங்கள், சீக்கிய சமூகத்தின் பாரம்பரியங்களைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் வலிமையின் மையமாக விளங்கும் சேவை மனப்பான்மை, ஒற்றுமை, நீதி ஆகியவற்றையும் வலுப்படுத்துகின்றன.

மலேசியாவின் தனித்துவம் அதன் பல்லின மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து ஒருவரையொருவர் மதிக்கும் திறனில் அடங்கியுள்ளது.

நமது பலம் நமது பன்முகத்தன்மையில் உள்ளது. கலாச்சாரம், பாரம்பரியம், நல்லிணக்கம் ஆகியவை வெறும் அடையாளச் சின்னங்கள் மட்டுமல்ல. அவை நமது ஒற்றுமையின் உண்மையான அடித்தளமாகும்.

இன்று நடைபெற்ற வைசாகி விழா 2026-ஐத் தொடங்கி வைத்த பிரதமர் இவ்வாறு பேசினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset