நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வியிலும் சுகாதாரத்திலும் இந்திய சமுதாயத்தை ஓரம் கட்ட கூடாது; கோல சிலாங்கூரில் மீண்டும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம்: சுரேன் கந்தா

கோலாலம்பூர்:

நாட்டில் கல்வியிலும் சுகாதாரத்திலும் இந்திய சமுதாயத்தை அரசாங்கம்  ஓரம் கட்ட கூடாது.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா இதனை வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் கல்வி யுத்தம் என்ற கல்வி புரட்சியை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஏற்படுத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் ஸ்ரீ முருகன் கல்வி யுத்தம் கோல சிலாங்கூரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

இந்த கல்வி யுத்தம் நிச்சயம் கோல சிலாங்கூர் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்களிடையே கல்வி புரட்சியையும் உருமாற்றத்தையும் ஏற்படுத்தும்.

அதே வேளையில் கோல சிலாங்கூர் சுற்று வட்டாரத்தில் மீண்டும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகளின் அடிப்படையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் கோல சிலாங்கூர் வட்டாரத்தில் மீண்டும் திறக்கப்படும்.

இதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று சுரேன் கந்தா கூறினார்.

முன்னதாக இன்றைய நிகழ்ச்சிக்கு சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்ளி அஹ்மத் வர வேண்டியதாக இருந்தது.

பணி சுமையின் காரணமாக அவர் வரவில்லை.

இருந்தாலும் அவரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விருப்பினேன்.

அதாவது கல்வியிலும் சுகாதாரத்திலும் இந்திய சமுதாயத்தை அரசாங்கம்  ஓரம் கட்டக் கூடாது.

குறிப்பாக தகுதியான மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும்.

இக்கோரிக்கை அரசாங்கத்திற்கு சென்றடையும் என தாம் நம்புவதாக சுரேன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset