செய்திகள் மலேசியா
வேலை செய்வதில் சோம்பேறி கொள்ளும் தொகுதித் தலைவர்கள் விடுப்பில் செல்லலாம்: பிரதமர்
கோத்தாபாரு:
வேலை செய்வதில் சோம்பேறி கொள்ளும் தொகுதித் தலைவர்கள் விடுப்பில் செல்லலாம்.
பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
கட்சிக்கு பயனளிக்காத அற்ப விஷயங்களுக்காக சண்டையிடுவதை அனைவரும் நிறுத்தி கொள்ள வேண்டும்.
அதற்குப் பதிலாக மக்களுக்காக உழைப்பதில் அனைத்து தொகுதி தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், வேலை செய்ய சோம்பேறித்தனமாக இருக்கும் தொகுதித் தலைவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக அவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய கட்சியின் பொதுச் செயலாளருக்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை (ல்எதிர்கொள்ள நாம் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும்.
அற்ப விஷயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டும், தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்காமலும் இருப்பதற்குப் பதிலாக, முயற்சியும் உழைப்பும் கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2026, 11:48 pm
பண்பாட்டுப் பன்முகத்தன்மை தேசிய ஒற்றுமைக்கு ஒரு வலுவான அடித்தளம்: பிரதமர்
April 18, 2026, 6:19 pm
சிலாங்கூர் சுக்மா போட்டியில் மூன்று தங்கத்திற்கு கூட்டரசுப் பிரதேச சிலம்பக் கழகம் இலக்கு
April 18, 2026, 5:03 pm
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கிய போலிஸ் அதிகாரிகள்
April 18, 2026, 3:01 pm
பாலோக் கடற்கரையில் சோகம்: விடுதியிலிருந்து வெளியேறிய மாணவர் மாயம்
April 18, 2026, 2:45 pm
