நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கிய போலிஸ் அதிகாரிகள்

பேராக்: 

பேராக் மாநிலம் ஈப்போவில் உள்ள கேளிக்கை விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், போதைப்பொருள் பயன்படுத்திய இரண்டு போலிஸ் அதிகாரிகல் உட்பட மொத்தம் 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி ஈப்போவின் இரு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, மூன்று போலிஸ் அதிகாரிகள் அங்கிருந்தது கண்டறியப்பட்டன. 

இவர்களில் ஜொகூர் மாநிலத்தில் பணியாற்றும் 26, 40 வயதுடைய இரு போலிஸ் அதிகாரிகள் போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது. 

ஒருவர் 'கெட்டமின்' (Ketamine) உட்கொண்டதும், மற்றொருவர் பல்வேறு வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதும் சோதனையில் தெரியவந்துள்ளது. அங்கிருந்த மற்றொரு காவல் அதிகாரிக்கு போதைப்பொருள் சோதனையில் 'நெகட்டிவ்' என முடிவு வந்துள்ளது.

இந்தச் சோதனையில் சிக்கிய 19 முதல் 52 வயதுக்குட்பட்ட 59 ஆண்கள், 28 பெண்கள் மீது போதைப்பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாலும் மலேசிய அரசக் காவல்துறை (PDRM) ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்று டத்தோ ஹுசைன் ஓமர் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset