செய்திகள் தமிழ் தொடர்புகள்
மேற்கு வங்க தேர்தலில் வாக்களிக்க தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளாளர்கள் சாரிசாரியாக ரயிலில் புறப்படுகின்றனர்
சென்னை:
சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் தங்கிப் பணியாற்றி வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்கம் நோக்கிச் செல்லும் ரயில்களில் நேற்று மாலை முதல் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
இதனால், ஹௌரா ரயிலின் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏறக் காத்திருந்த தொழிலாளர்களை ரயில்வே காவல்துறையினர் ஒழுங்கப்படுத்தி, வரிசையில் நின்று ரயிலில் ஏறுமாறு அறிவுறுத்தினர்.
தொழிலாளர்கள் பலரும், தங்கள் சொந்த ஊர்களுக்கு மிக மகிழ்ச்சியோடு கிளம்புவதைப் பார்க்க முடிந்தது. பலரும் ஒரு வாரத்துக்கும் மேல் விடுமுறையில் சொந்த ஊர் செல்வதாகவும் கூறுகிறார்கள்.
அங்கே பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினரும், காலையில் கோரமண்டல் விரைவு ரயிலும், மாலையில் ஹௌரா ரயிலும் வழக்கத்தைவிட கூட்டமாகப் புறப்படுவதாகக் கூறுகிறார்கள் அவ்வழியே பயணித்தவர்கள்.
திங்கள்கிழமை முதலே ஏராளமான தொழிலாளர்கள் சென்னையிலிருந்து புறப்படத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
