செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஊட்டியில் பரபரப்பு: நடிகை குஷ்பு பயணித்த ஹெலிகாப்டரில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினரின் அதிரடி சோதனை
ஊட்டி:
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு பயணித்த ஹெலிகாப்டரில் தேர்தல் கண்காணிப்புக் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அரசியல் பிரமுகர்கள், முக்கிய நபர்களின் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று பிரசாரத்திற்காக ஊட்டிக்கு வந்த நடிகை குஷ்புவின் ஹெலிகாப்டர் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த தேர்தல் படையினர் அதனை வழிமறித்தனர்.
ஹெலிகாப்டரில் சட்டவிரோதமாகப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் ஏதேனும் கொண்டு வரப்படுகிறதா என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் இந்த ஆய்வை நடத்தினர்.
குஷ்புவின் முன்னிலையிலேயே அவரது உடமைகள், ஹெலிகாப்டரின் உட்பகுதிகள் முழுமையாகச் சோதனையிடப்பட்டன.
இந்த அதிரடி சோதனையால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இருப்பினும், சோதனையின் முடிவில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெரியவந்தது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
