செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் வாகனங்களுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயுக்கள் கிடைக்காததால், ஓட்டுநா்கள் கடும் அவதி
சென்னை:
சென்னையில் வாகனங்களுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயுக்கள் கிடைக்காததால், ஓட்டுநா்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
சென்னை நகரில் பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்கள், கால்டாக்சிகள் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயுவைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றன. அதேபோல், பல சிறு வணிக வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கான பேருந்துகளும் தற்போது சிஎன்ஜி எரிவாயுவில் இயக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பலா் தங்கள் வாகனங்களின் கட்டமைப்பை எல்பிஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயு மூலம் இயக்கும் வகையில் மாற்றி அமைத்திருந்தனா்.
வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளைக்கு ஏற்கெனவே தட்டுப்பாடு நிலவி வந்தாலும், வாகனங்களுக்கான எல்பிஜி எரிவாயு பல இடங்களில் கிடைத்து வந்தது.
ஆனால், கடந்த சில நாள்களாக வாகனங்களுக்கான எரிவாயு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடகை வாகன ஓட்டுநா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். வடபழனி, எழும்பூா், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல எல்பிஜி எரிவாயு நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டதால், ஆட்டோக்கள், காா்களுக்கு எரிவாயு நிரப்ப எரிவாயு நிலையங்களைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சிஎன்ஜி எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
