செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு நிறைவு: கோடை விடுமுறை இன்று தொடங்குகிறது
சென்னை:
பள்ளி முழு ஆண்டுத் தேர்வுகள் நேற்றுடன் (ஏப்.16) நிறைவு பெற்றதை அடுத்து, மாணவர்களுக்கான கோடை விடுமுறை இன்று (ஏப்.17) முதல் தொடங்குகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளதால், வழக்கத்தைவிட முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதன்படி 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வந்த முழு ஆண்டுத் தேர்வுகள் நேற்றுடன் (ஏப்ரல் 16) நிறைவுபெற்றன. நிறைவு நாளில் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு: தொடர்ந்து இவர்களுக்கான கோடை விடுமுறை இன்று (ஏப்ரல் 17) முதல் தொடங்குகிறது. எனினும், ஆசிரியர்கள் பள்ளி இறுதி வேலைநாளான ஏப்ரல் 25-ம் தேதி வரை பணிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீடு, மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாகப் பணிகளை கவனிக்க வேண்டும். கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
