செய்திகள் உலகம்
யுனெஸ்கோ பாரம்பரிய விழாவில் நேர்ந்த விபரீதம்: லாஃபெரியர் கோட்டை நுழைவாயிலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்
போர்ட்-ஆ-பிரின்ஸ், ஹைட்டி:
ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட 'லாஃபெரியர்' (Laferriere) கோட்டையில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த உலகப் பாரம்பரியச் சின்னத்தின் வருடாந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்க, ஆயிரக்கணக்கான மாணவர்களும் சுற்றுலாப் பயணிகளும் திரண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாகப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஜீன் ஹென்றி பெட்டிட் தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்த கனமழையினால் தரைப் பகுதி வழுக்கிய நிலையில், கோட்டையின் நுழைவு வாயில் பகுதியில் ஏற்பட்ட கடும் நெரிசலே இந்த மரணங்களுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் அலிக்ஸ் டிடியர் பில்ஸ்-ஐம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் எனத் தனது அறிக்கையில் உறுதி அளித்துள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 11:17 am
"இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடாக மாறுகிறது": ஆர்வலர் மியா சோல் ஆவேசம்
April 11, 2026, 11:03 am
பாங்காக் நோக்கிச் சென்ற ரயிலில் சைபு பறிமுதல்: 3 மலேசியர்கள் கைது
April 10, 2026, 12:15 pm
இந்தோனேசியக் கடலில் பரபரப்பு: டார்பிடோ வடிவிலான மர்மப் பொருள் கண்டுபிடிப்பு
April 10, 2026, 11:40 am
இந்தோனேசியா கூகுளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
April 10, 2026, 11:18 am
வாஷிங்டனில் இஸ்ரேல் - லெபனான் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா?
April 10, 2026, 10:31 am
