நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

"இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடாக மாறுகிறது": ஆர்வலர் மியா சோல் ஆவேசம்

வியன்னா: 

இஸ்ரேலிய தந்தைக்கும் நார்வே தாய்க்கும் மகளாகப் பிறந்த சமூக ஆர்வலர் மியா சோல் ஸ்டோலன், காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தனது இஸ்ரேலிய கடவுச்சீட்டை தீயிட்டுக் கொளுத்தினார். இஸ்ரேல் தற்போது ஒரு தீவிரவாத சமூகமாகவும், ஆக்கிரமிப்பு நாடாகவும் மாறி வருவதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

டெல் அவிவ் நகரில் ஏழு ஆண்டுகள் வசித்த அனுபவம் தனக்கு உண்டு என்று குறிப்பிட்ட அவர், மேற்குக் கரை, காசா பகுதிகளுக்கு நேரில் சென்றபோதுதான் அங்கு நிலவும் கொடூரமான உண்மைகளை உணர்ந்ததாகத் தெரிவித்தார். 

தொடக்கத்தில் அங்கு அனைவரும் அமைதியாக வாழ்வதாகவே தான் கருதியதாகவும், ஆனால் பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே ஒடுக்கப்படுவதைக் கண்டு தனது பார்வை மாறியதாகவும் அவர் கூறினார்.

ஹெப்ரான் நகரில் உள்ள முக்கியச் சாலைகளில் பாலஸ்தீனியர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதையும், இஸ்ரேலியர்களுக்கு மட்டுமே அங்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

இஸ்ரேலின் தற்போதைய அரசியல் சூழல் மிக மோசமாக இருப்பதாகவும், பல மேதைகள் நாட்டை விட்டு வெளியேறுவதால் தீவிரவாத சித்தாந்தம் கொண்டவர்களே அங்கு ஆதிக்கம் செலுத்துவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset