செய்திகள் உலகம்
ஈரான்-அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்தது: அமெரிக்கத் துணை அதிபரின் இறுதி எச்சரிக்கை
இஸ்லாமாபாத்:
அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கு இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
சுமார் 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில், அமெரிக்காவின் 'இறுதி, சிறந்த சலுகை' முன்மொழிவை ஈரானிடம் வழங்கிவிட்டு வெளியேறுவதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் அறிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேன்ஸ், அணு ஆயுதத் தயாரிப்பு விவகாரமே இரு நாடுகளுக்கும் இடையிலான பிரதான முரண்பாடாக உள்ளதாகத் தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என்பதற்கான உறுதியான, நீண்டகால வாக்குறுதியை அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும், ஆனால் இதுவரை அத்தகைய உறுதிமொழியை ஈரான் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது கடந்த பிப்ரவரி, 2025-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய பின்னணியில் இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றது.
இதற்கிடையில், பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேலுடனான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. ஈரானின் பதிலை எதிர்பார்ப்பதாகக் கூறிய வேன்ஸ், ஹோர்முஸ் ஜலசந்தியைத் மீண்டும் திறப்பது போன்ற மற்ற சிக்கலான விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசவில்லை.
மறுபுறம், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த விவகாரத்தில் நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட அறிவுறுத்திய போதிலும், ஈரானின் பிடிவாதப் போக்கால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என வேன்ஸ் அதிருப்தி வெளியிட்டார்.
அமெரிக்காவின் இறுதி முன்மொழிவை ஈரான் ஏற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 11:17 am
"இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடாக மாறுகிறது": ஆர்வலர் மியா சோல் ஆவேசம்
April 11, 2026, 11:03 am
பாங்காக் நோக்கிச் சென்ற ரயிலில் சைபு பறிமுதல்: 3 மலேசியர்கள் கைது
April 10, 2026, 12:15 pm
இந்தோனேசியக் கடலில் பரபரப்பு: டார்பிடோ வடிவிலான மர்மப் பொருள் கண்டுபிடிப்பு
April 10, 2026, 11:40 am
இந்தோனேசியா கூகுளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
April 10, 2026, 11:18 am
வாஷிங்டனில் இஸ்ரேல் - லெபனான் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா?
April 10, 2026, 10:31 am
