நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சந்தையில் காய்கறி விலை உயர்வு

கோலாலம்பூர்: 

நாட்டைப் பாதித்து வரும் வெப்பமான வானிலை, எரிபொருள் விலை உயர்வு, தற்போதைய விநியோகப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், பல வகையான காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது.

அந்தக் காய்கறிகளில் பெரிய சிவப்பு மிளகாய், ஊசி  மிளகாய், பச்சை வெங்காயம், பேரியா கத்தாக், ஒக்ரா, கடுகு கீரை, ஜப்பனீஸ் வெள்ளரி, சாதாரண வெள்ளரி ஆகியன அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதுடைய காய்கறி வியாபாரி தௌஃபிக் ஹிதாயா அப்துல்லாஹ், பெரிய சிவப்பு மிளகாய் ரிம2 விலை உயர்ந்து, தற்போதைய விலை ஒரு கிலோகிராமுக்கு 10 ரிங்கிடாக இருப்பதாகத் தெரிவித்தார்.

"பேரியா கத்தாக்கின் விலை முன்பு ரிம6 ஆக இருந்த நிலையில், இப்போது ஒரு கிலோகிராமுக்கு 8 ரிங்கிட்டாக உள்ளது.

இலை காய்கறி வகைகள், தற்போதைய வெப்பமான வானிலை காரணமாக விலை உயர்வைச் சந்தித்துள்ளன.

சாதாரண வெள்ளரியின் விலையும் உயர்ந்து, முன்பு ஒரு கிலோகிராமுக்கு 2 ரிங்கிட் 50 காசாக இருந்த நிலையில், இப்போது 4.50 ஆக உள்ளது என்றார் அவர்.

கூடுதலாக, ஒரு கிலோகிராம் காய்கறியை வாடிக்கையாளர்களுக்கு விற்பதன் மூலம், காய்கறி வியாபாரிகள் 1 முதல் 2 ரிங்கிட் வரை மட்டுமே லாபத்தைப் பெறுவதாகத் தெரிகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset