செய்திகள் தமிழ் தொடர்புகள்
புதுவையில் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்த 18 அரசு ஊழியர்கள் இடைநீக்கம்: வாக்குச் சீட்டை களாவாடிச் சென்ற சுயேட்சை வேட்பாளர் கைது
புதுச்சேரி:
புதுச்சேரியில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக 18 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சீட்டு திருடிய சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது வரை ரூ. 8.4 கோடி பணம், மதுபானங்கள், தங்கம் வெள்ளி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.9) காலை 7.00 மணிக்குத் தொடஙகியது
தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடக்கிறது. மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பதற்றமானவை 209.
அதிக பதற்றமானவையாக 5 என கண்டறியப்பட்டுள்ளன. 3 இடங்களில் தனித்துவமான வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளோம். இவற்றை பெண் அலுவலர்கள் மட்டுமே நிர்வகிப்பர்.
புதிய அரசு ஊழியர்கள் 15 வாக்குச்சாவடிகளையும், மாற்றுத்திறனாளி அதிகாரிகள் 2 வாக்குச்சாவடிகளையும் நிர்வகிப்பர். வாக்குப்பதிவு பணிகளில் 5 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுவர். மைக்ரோ அப்சர்வர்கள் 173 பேரும், போலீஸார் 2800 பேரும் பணியில் ஈடுபடுவர்.
புதுச்சேரியில் ரூ. 77.25 லட்சம் பணம், மதுபானங்கள் ரூ. 65 லட்சம், போதைப்பொருட்கள் ரூ. 21 லட்சம், தங்கம், வெள்ளி போன்றவை ரூ. 6.71 கோடி என மொத்தம் ரூ. 8.4 கோடி பறிமுதல் செய்துள்ளோம்.
புதுச்சேரி தேர்தலை பார்வையிட கிர்கிஸ்தான், ஐவரி கோஸ்ட், மால்டோவா, மங்கோலியா, கயானா, பூடான் ஆகிய நாடுகளில் இருந்து 9 உறுப்பினர்கள் புதுச்சேரி வந்துள்ளனர்.மொத்தம் 9.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக அரசு ஊழியர்கள் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 12,591 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. இம்முறை 90 சதவீத வாக்குப்பதிவு வரை எதிர்பார்க்கிறோம்.
வயதானவர்கள், கர்ப்பிணிகள்,மாற்றுத்திறனாளிகள் உடனே வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குச்சீட்டை பொருத்தும்போது, யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்ற சுயேச்சை வேட்பாளரை கைது செய்துள்ளோம்.
புதுச்சேரியில் 3, காரைக்கால், மாஹே, ஏனாமில் தலா ஒன்று என வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும். இவ்வாறு தெரிவித்தார். உடன் தேர்தல் துறை அதிகாரிகள் தில்லைவேல், கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
