செய்திகள் தமிழ் தொடர்புகள்
முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு
சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நான்கு முதல்வர் வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது.
வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், மொத்தம் 234 தொகுதிகளில் 7,000-க்கும் மேற்பட்டோர் போட்டியிட வேட்புமனு அளித்திருந்தனர்.
அனைத்து வேட்புமனுக்களையும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இன்று காலை முதல் பரிசீலனை செய்தனர்.
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின், எடப்பாடியில் எடப்பாடி கே. பழனிசாமி, காரைக்குடியில் சீமான், பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய்யின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் புண்ணியவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு மறுபரிசீலனைக்குப் பின்னர் ஏற்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
