செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்சியில் காற்றுடன் பலத்த மழை: 200 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம்
திருச்சி:
கடலோரத்தில் ராயலசீலா முதல் மன்னார் வளைகுடா வரை நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. திருச்சி மாநகரில் 9 மணியளவில் மழை தொடங்கியது.
காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சுமார் 2 மணி நேரம் மழை நீடித்தது. இதன்காரணமாக மேஜர் சரவணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே இருந்த மரத்தின் கிளை முறிந்து மின் ஒயரில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காற்றுடன் பெய்த மழையால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது.
இதேபோல் சமயபுரம், மண்ணச்சநல்லூர், துவாக்குடி உள்பட திருச்சியில் பல இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை காரணமாக வயலூர், எட்டரை, கோப்பு, மேலவயலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 200 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தது. தார் அறுக்கும் தருவாயில் இருந்த வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சேத மதிப்பு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
