செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மலேசிய நேரம் மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்தது
சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (ஏப்.6) பிற்பகல் 3 மணியுடன் மலேசிய நேரம் மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்தது.
234 தொகுதிகளுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்காக மார்ச் 30 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.
நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகிறது.
வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாளான இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜகவின் வானதி சீனிவாசன், திமுகவின் துரை முருகன், மஜகவின் தமீமுன் அன்சாரி ஆகியோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
தனது மகனுக்கு மாற்றாக திமுக அமைச்சர் காந்தியும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சுமார் 4300-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கரூரில் 93-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நாம் தமிழர் கட்சி, தவெக கட்சிகள் தனித்தனியாக 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
