நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரஞ்சு அதிபரின் மண வாழ்க்கை சரியில்லை என்று கூறிய அமெரிக்க அதிபருக்கு மக்ரோன் பதிலடி

வாஷிங்டன்:

பிரஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தமது திருமண வாழ்க்கையை விமர்சித்ததற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைக் (Donald Trump) கண்டித்திருக்கிறார்.

திரு டிரம்ப்பின் பேச்சில் நயமும் இல்லை தரமும் இல்லை என்று  மக்ரோன் சாடினார்.

நேட்டோ உதவவில்லை அவசரமாகக் கப்பலை அனுப்பச் சொன்னதற்கு பிரான்சும் பதில் சொல்லவில்லை என்று கோபமாக பேசிய அதிபர் டிரம்ப், திடீரென்று அதிபர் மக்ரோனை அவரது மனைவி மோசமாக நடத்துவதாகக் கூறினார்.

டிரம்ப் சொன்னது வெள்ளை மாளிகையின் YouTube தளத்தில் சிறிது நேரம் இருந்தபின் அவசரமாக அகற்றப்பட்டது. இருப்பினும் அது அதிக அளவில் பகிரப்பட்டுவிட்டது.

தென் கொரியாவில் இருக்கும் மக்ரோன் அதிபர் டிரம்ப்பின் பேச்சு பதில் சொல்லும் அளவுக்குத் தரமான பேச்சில்லை என்றார். தான் ஒரு மட்டமான ஆள் என்று அவர் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset