நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பொம்மைக்கு இறுதிச் சடங்கு’ - மனதை ரணமாக்கும் காசா வாழ் மழலைகளின் காணொலி

காஸா:

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன மக்களை கொடூரமாக கொலை செய்து வருவது உலகம் அறிந்த ஒன்றே. இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா நகரில் வாழும் மழலைகள் பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்வதுபோல் விளையாடிய வீடியோ இப்போது உலகளவில் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது.

போர் மிகக் கொடூரமானது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த காணொலி அமைந்துள்ளது. 

பிள்ளை மனம் மாறாத மழலைகள் சிலர், பொம்மை ஒன்றை இறுதிச் சடங்குக்கு அந்த வீடியோவில் கொண்டு செல்கின்றனர். வழக்கமாக பொம்மையைக் கொண்டு விளையாடும் உலக அளவிலான குழந்தைகளுக்கு மத்தியில் காசா மழலைகளின் இந்த விளையாட்டு வேதனை தரும் வகையில் அமைந்துள்ளது.

சுமார் 48 வினாடிகள் கொண்ட அந்த காணொலியில் பொம்மை ஒன்றை ஸ்ட்ரெச்சர் மாதிரியான படுக்கை ஒன்றில் வைத்து, அதை அந்த பிஞ்சு கைகள் சுமந்து செல்கின்றன. 

“பொம்மையை கொண்டு வழக்கமாக விளையாடும் விளையாட்டுக்கான சூழலை தொலைத்த மழலைகளின் நிலை இது” என இணையவாசிகள் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 

“இந்த செயலுக்கான புரிதல் இல்லாத அவர்கள், தாங்கள் அன்றாட வாழ்வில் பார்ப்பதை செய்துள்ளனர்” என மற்றொருவர் தெரிவித்துள்ளார். ‘இந்த பூமியில் மிகவும் பாதிக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்’ என்றும், ‘உடனடி தேவை அமைதி’ என்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset