செய்திகள் உலகம்
சில மருந்து பொருட்களின் இறக்குமதிக்கு 100 சதவீத வரி விதிக்கிறார் டிரம்ப்
நியூயார்க்:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காப்புரிமை பெற்ற சில மருந்து பொருட்கள், தொடர்புடைய மருந்து வேதிப் பொருட்களின் இறக்குமதிக்கு 100 சதவீத 'அட் வலோரெம்' வரியை வியாழக்கிழமை விதித்துள்ளார்.
வியாழக்கிழமை கையெழுத்திட்ட நிர்வாக ஆணையில், அந்த இறக்குமதிகள் "அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவிலும் நிலையிலும்" உள்ளதாக டிரம்ப் கூறினார்.
விதிக்கப்பட்ட வரியானது, கிழக்கத்திய பகல் நேரப்படி ஜூலை 31, 2026 அன்று நள்ளிரவு 12:01 மணி முதல் அல்லது அதற்குப் பிறகு அமலுக்கு வரும்.
அமெரிக்க வர்த்தகச் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்ட, தங்கள் செயல்பாடுகளை அமெரிக்காவிற்குள் மாற்றும் (onshoring) திட்டங்களைக் கொண்டிருக்கும், அல்லது எதிர்காலத்தில் கொண்டிருக்க வாய்ப்புள்ள நிறுவனங்களின் பொருட்களுக்கு 20 சதவீதமாக வரி இருக்கும். ஆனால், ஏப்ரல் 2, 2030 அன்று அது 100 சதவீதமாக உயரும் என்று அந்த ஆணை தெரிவிக்கிறது.
ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டீன் ஆகிய அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளுக்கு 15 சதவீத வரியும், பிரிட்டனுக்கு 10 சதவீத வரியும் விதிக்கப்படும் என்று அந்த ஆணை கூறுகிறது.
ஜெனரிக் மருந்து பொருட்கள், உயிர் ஒப்புமை மருந்துகள் (biosimilars), தொடர்புடைய பொருட்கள், அத்துடன் அணு மருத்துவம், பிளாஸ்மா வழி சிகிச்சைகள், கருவுறுதல் சிகிச்சைகள், செல், மரபணு சிகிச்சைகள் உள்ளிட்டவை தற்போதைக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணை தெரிவிக்கிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 4:12 pm
பிரஞ்சு அதிபரின் மண வாழ்க்கை சரியில்லை என்று கூறிய அமெரிக்க அதிபருக்கு மக்ரோன் பதிலடி
April 3, 2026, 1:37 pm
பொம்மைக்கு இறுதிச் சடங்கு’ - மனதை ரணமாக்கும் காசா வாழ் மழலைகளின் காணொலி
April 2, 2026, 6:24 pm
அமெரிக்கா வருத்தப்பட்டு சரணடையும் வரை இந்தப் போர் தொடரும்: தளபதி காத்தம் அல்-அன்பியா
April 2, 2026, 3:16 pm
இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்தோனேசியா
April 2, 2026, 1:04 pm
ஈரான் உடனான மோதலை நியாயப்படுத்திய டொனால்ட் ட்ரம்ப்
April 2, 2026, 11:40 am
