நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கா வருத்தப்பட்டு சரணடையும் வரை இந்தப் போர் தொடரும்: தளபதி காத்தம் அல்-அன்பியா

டெஹ்ரான்:

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக அதிரடித் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.

வரும் வாரங்களில் ஈரானில் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்; அந்நாட்டின் எரிசக்தி கட்டமைப்பும் குறிவைக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) இன்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த ஈரானிய ராணுவத்தின் செயல்பாட்டுத் தளபதி காத்தம் அல்-அன்பியா, அமெரிக்கா வருத்தப்பட்டு சரணடையும் வரை இந்தப் போர் தொடரும் என்று தெரிவித்தார்.

விரிவாக மிகக் கடுமையாகத் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று டிரம்ப் உரையாற்றியபோது, அமெரிக்கப் படை மகத்தான வெற்றி அடைந்துவிட்டதாகவும் ஈரான் இனி ஓர் அச்சுறுத்தல் கிடையாது என்றும் டிரம்ப் சொன்னார்.

அவருடைய உரை முடிந்ததும் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் ஈரான் தொடர் தாக்குதல் நடத்தியது.

டெல் அவீவ் வட்டாரத்தில்  பொதுமக்கள் தெறித்து ஓடினார்கள். பல பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. நகரம் முழுவதும் பல மணி நேரம் சைரன் ஒலிகள் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தன. மக்கள் பதுங்கு குழிகளில்தங்கி உள்ளனர். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset