செய்திகள் உலகம்
ஈரான் மீதான தாக்குதல் விரிவடைந்தால் போரில் குதிப்போம்; அமெரிக்காவுக்கு ஹூதி அமைப்பு பகிரங்க எச்சரிக்கை
சனா:
யெமனில் உள்ள ஹூதி குழு, ஈரானுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்க, இஸ்ரேலுடன் வேறு நாடுகள் கூட்டு சேர்ந்தால் நேரடியாக இராணுவ தலையீடு செய்ய தயாராக இருப்பதாக வலியுறுத்தியது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த செங்கடல் பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.
"நேரடி இராணுவ தலையீட்டிற்கு 'ஆயுதத்தின் தூண்டுகோலில் விரல் வைத்திருப்பதை' உறுதிப்படுத்துகிறோம்" என்று குழுவின் இராணுவ செய்தியாளர் யாஹ்யா சாரீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில் கூறினார்.
புதிய கூட்டணி அமெரிக்க, இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான், அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக நிற்கும் போது அல்லது ஈரானுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளுக்கு செங்கடல் பயன்படுத்தப்படும் போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த எச்சரிக்கை பிராந்திய அளவில் பரந்த மோதல் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக ஹூதியின் யெமனுக்கு அப்பால் தொலைதூர இலக்குகளைத் தாக்கும் திறனையும் அரேபியன் தீபகற்ப வழியிலான கப்பல் போக்குவரத்தை இடையூறு செய்யும் திறனையும் கருத்தில் கொண்டு இது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க, இஸ்ரேல் தெஹ்ரானைரத் தாக்கியதைத் தொடர்ந்து, லெபனானிலும் ஈராக்கிலும் ஈரானின் ஷியா கூட்டாளிகள் ஏற்கனவே பிராந்திய மோதலில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதுவரை ஹூதி இராணுவ திறன், செங்கடலை நோக்கிய மூலோபாய புவியியல் நிலையைக் கொண்டிருந்தாலும், யுத்தத்தில் நேரடி பங்கேற்பை அறிவிக்கவில்லை.
செங்கடலை ஈரான் அல்லது எந்தவொரு இஸ்லாமிய நாட்டிற்கும் எதிரான விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் சாரீ வலியுறுத்தினார்.
யெமன் மீதான பொருளாதார தடைகளை மேலும் கடுமையாக்க வேண்டாம் என்று எச்சரித்ததோடு மேலும் ஈரான், நட்பு நாடுகளான பாலஸ்தீன் பகுதிகள், லெபனான், ஈராக் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.
அக்டோபர் 7, 2023-ல் இஸ்ரேல்-பாலஸ்தீன் யுத்தம் தொடங்கிய பின்னர், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஹூதி குழு செங்கடலில் சர்வதேச கப்பல்களைத் தாக்கத் தொடங்கியது. இந்த தாக்குதல்களில் இஸ்ரேலை நோக்கிய டிரோன்களும் ஏவுகணைகளும் அடங்கும். அக்டோபர் 2025-ல் அமெரிக்க மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 12:02 pm
ஈரானின் புஷ்ஹேர் அணு மின்நிலையம் மூன்றாவது முறையாக தாக்கப்பட்டது
March 28, 2026, 11:21 am
போக்கிமான் கடையில் இரத்தக் களரி
March 28, 2026, 10:28 am
நவீன வசதிகளுடன் ஒரு சிறிய சொர்க்கம்
March 27, 2026, 5:34 pm
எல்லைகளைக் கடந்த மனிதாபிமானம்: ஓமன் வெள்ளத்தில் இந்தியர்களைக் காப்பாற்றிய பாகிஸ்தான் வீரர்
March 27, 2026, 3:18 pm
ஈரானின் கெஷ்ம் தீவுக்கு அருகே தாய்லாந்து சரக்குக் கப்பலான மயூரி நாரி தாக்கப்பட்டது
March 27, 2026, 11:07 am
சுங்கச்சாவடி அமைப்பு மூலம் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துகிறது ஈரான்
March 27, 2026, 10:38 am
“கழிப்பறை காகிதப் பற்றாக்குறையால் பதற்றம் தேவையில்லை”: மக்களிடம் ஜப்பான் அரசின் வேண்டுகோள்
March 27, 2026, 10:32 am
